Wednesday, December 22, 2010
பொண்ணுங்க Exam-க்கு Prepare
ஆகற அழகே தனி..
1. எப்பவும் Group Study தான்
இவங்க Choice..
( அப்ப தான் " அந்த Fan Switch-ஐ போடு..! "
" குடிக்க ஒரு டம்ளர் தண்ணி குடு..! "
இப்படி கஷ்டமான வேலைகளை
அம்மா கொடுக்க மாட்டாங்க.. )
2. அப்பாவி Parents இருக்கிற வீடு ( or )
Parents வேலைக்கு போற வீடு.,
அது தான் இவங்க Group Study-க்கு
Spot-ஆ இருக்கும்.
3. Group Study-ல என்ன பண்ணுவாங்கன்னா..
9.00 - 12.00 : Sun Music
12.00 - 1.00 : Lunch Break
1.00 - 5.00 : இப்பதான் Book-ஐ கையில
எடுப்பாங்க.. ஆரம்பிக்கும் போதே
சந்தேகம் வந்துடும்..
" இது என்னான்னே புரியலைப்பா..? "
" என்ன விளையாடறீயா..? இதுவரைக்கும்
எதை நாம புரிஞ்சி படிச்சி இருக்கோம்..
அப்படியே மனப்பாடம் பண்ணு.."
4. சும்மா சொல்லக்கூடாது.., எவ்ளோ
கஷ்டமான பாடமா இருந்தாலும் படிச்சிடுவாங்க..
( Sorry மனப்பாடம் பண்ணிடுவாங்க.. )
5. Exam-ல நல்ல மார்க் வேணும்னு கிட்டதட்ட
உலகத்தில உள்ள எல்லா சாமிகிட்டேயும்
வேண்டிகிட்டு இருப்பாங்க.. ஒவ்வொரு சாமி
ஒரு மார்க் போட்டா கூட 107 மார்க் வரும்..
6. Exam-க்கு போறப்ப கையில சின்னதா
ஒரு Watch கட்டியிருப்பாங்க.. அதையும்
உள்பக்கம் திருப்பி கட்டியிருப்பாங்க..
( அந்த வாட்சே நம்ம கண்ணுக்கு தெரியாது..
அதுல எப்படிதான் Time பார்க்கறாங்களோ.?!! )
7. Exam-ல 3 மணி நேரம் இவங்களுக்கு
பத்தவே பத்தாது.. கடைசி பெல் அடிக்கிற
வரை எழுதிட்டே இருப்பாங்க..
8. Exam முடிந்து Professor மாணவியிடம்..
" Exam நல்லா எழுதியிருக்கேம்மா.. ஆமா
ஒவ்வொரு Answer-க்கு கீழேயும் 78 , 54 , 117
இப்படி எதோ ஒரு நம்பர் எழுதி இருக்கியே
என்னம்மா அது..?
" அப்படிதான் சார் இந்த Book-ல இருக்கு..
நீங்களே பாருங்க..!! "
" ஏம்மா.. அது Page நம்பர்மா. அதையும்
சேர்த்தா மனப்பாடம் பண்ணுவே..???!! "
Subscribe to:
Posts (Atom)